திருச்சி வருமான வரித்துறை சார்பில் வருகின்ற 11-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான
வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம் திருச்சி பாரதியார் சாலையில் உள்ள பல்நோக்கு சேவை சங்கம் அரங்கில் (R.C. பள்ளி அருகில் ) பிற்பகல் மணி 3 முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் மதுரை மண்டல வருமான வரித் துறை முதன்மை ஆணையர் த.வசந்தன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். இந்த விளக்க கூட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தொழிலாளர் சிக்கன நாணய சங்கங்கள் மற்றும் நகர்புற கூட்டுறவு வங்கிகள் சம்பந்தமான வருமான வரித்துறை சட்டம் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட உள்ளது. இக் கூட்டத்தில் வருமான வரித்துறை மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டு வருமான வரி குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பார்கள். எனவே, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தொழிலாளர் சிக்கன நாணய சங்கங்கள் மற்றும் நகர்புற கூட்டுறவு வங்கிகள் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயனைடையுமாறு திருச்சி வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் து.நித்யா கேட்டு கொண்டுள்ளார்.