மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் வழிகாட்டுதல் படி மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பக்கீர் மைதீன் @ பாபு அவர்கள் தலைமையில், மாவட்ட அவைத் தலைவர் ஷேக் தாவூத், பொருளாளர் சையது முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் மற்றும் மேலிட பொறுப்பாளர் வல்லம் அகமது கபீர் மற்றும் மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷரிப் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி, வருகின்ற பத்தாம் ஆண்டு கட்சி தொடக்க விழாவை முன்னிட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் முன்னதாக சமீபத்தில் மரணம் எய்திய மாவட்ட துணைச் செயலாளர் சடையன் அவர்களது தகப்பனார் மறைவிற்கு
இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வருகின்ற பிப்ரவரி 28.02.2025 மஜக பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்டத்தில் பிரம்மாண்டமாக கட்சி கொடியேற்றுவது, நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்குவது எனவும், 23.02.2025 அன்று திருப்பூரில் நடைபெற உள்ள 10 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக் கூட்டத்தில் அதிகமானோர் திருச்சி மாவட்டத்திலிருந்து கலந்து கொள்வது எனவும் மேலும் திருச்சி மாவட்டத்தில் அதிகமாக கிளைகள் கழகங்களை அமைத்து மாவட்ட பொதுக்குழு நடத்துவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் தர்வேஷ், ஷேக் அப்துல்லா, ஹபீப் ரஹ்மான் உட்பட மாவட்ட அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.