Skip to content

தஞ்சையில்அரசியல் சாரா ஓய்வூதியர் சங்க துவக்க விழா…

  • by Authour

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் அரசியல் சாரா ஓய்வூதியர் சங்க துவக்க விழா தஞ்சாவூரில் நடந்தது. சங்க நிர்வாகி மருதமுத்து ஜெயச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பத்மநாபன் குணசேகரன் வரவேற்புரை ஆற்றினர். மாநில தலைவர் தஞ்சை ராஜா தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து உறுப்பினர்களையும் ஒன்று சேர்த்து அரசியல் சாரா ஓய்வதியர் சங்கத்தின் தொடக்க விழா நடந்தது.

இது இதில் மாநில செயலாளராக சென்னையை சேர்ந்த சேகர், பொருளாளராக நத்தம் ராமமூர்த்தி, துணை பொதுச்செயலாளராக சேலம் மாரப்பன், காஞ்சிபுரம் முரளி, சீர்காழி அமுதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில துணைத்தலைவர்களாக நாகை இளங்கோவன் ,வேலூர் தட்சணாமூர்த்தி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஒன்பது வருடமாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படியை உடன் வழங்க வேண்டும். கடந்த 2023 ஆண்டு முதல் ஓய்வு பெற்ற யாருக்கும் பண பலன்கள் வழங்காமல் உள்ளது கண்டிக்கத்தக்கது. இதை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள சங்கங்கள் அரசியல் ரீதியாக செயல்படாமல் அனைவரையும் ஒன்றிணைத்து செயல்பட வேண்டும்.

ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் நிதி இல்லை என்ற காரணத்தை கூறி வழங்கப்படாமல் உள்ளது. இதை அரசு ஏற்று போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பண பலன்களை வழங்க வேண்டும். விழாவில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், சேலம், நாமக்கல், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கம்பம், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!