திருச்சி முசிறி அருகே உள்ள ஏழூர்பட்டி வாளவாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் திருச்சி திண்டுக்கல் சாலை இனாம் குளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் ஒப்பந்த லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் நேற்று பணிக்கு வந்தவர் உணவு அருந்துவதற்காக இரவு 10 மணி அளவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு எதிர்ப்புறம் உள்ள உணவகத்திற்கு செல்வதற்காக சாலையை கடந்துள்ளார். அப்போது மணப்பாறையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதனை அறிந்து அங்கு வந்த இனாம்குளத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர் திருச்சி கள்ளிக்குடியைச் சேர்ந்த மாணிக்கம் (56) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.