திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 16 மற்றும் 35 வார்டு பகுதிகளான தெற்கு உக்கடை, வடக்கு உக்கடை சர்வீஸ் சாலையும், அதனை இணைக்கும் சுரங்கப்பாதையும் சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் செல்வராஜ், சாகுல் ஹமீது, , முகமது பாஷா ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிவக்குமார், சீனிவாசன், பாலக்கரை பகுதி செயலாளர், மாமன்ற உறுப்பினர் சுரேஷ், பாலக்கரை பகுதிக்குழு உறுப்பினர் கனல் கண்ணன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
