திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் சுற்றுலாத்தளமான ஏலகிரி மலையில் உள் மாவட்ட மக்கள் வருகை புரிவது மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, என வெளி மாநிலத்திலிருந்து அதிகப்படியான மக்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் படகு சவாரியில் 15 நபருக்கு மேலாக சவாரி செய்வதால் ஆபத்து ஏற்படும் அபாயகரமான சூழல் அங்கு நிலவுகிறது அதை பொருட்படுத்தாமல் நான்வருமானம் ஈட்டும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள் மேலும் படகு சவாரியை சுற்றியுள்ள இரும்பு வேலி கம்பி பல வருடங்களுக்கு முன்பு இருந்தே உடைந்து கீழே விழுந்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பொதுமக்களும் குழந்தைகளும் அந்த இடத்தில் நின்று ஆபத்தை உணராமல் செல்பி எடக்கின்றனர் மேலும்
தண்ணீரில் குப்பைகளும் காலி வாட்டர் கேன்களும் மிதப்பதினால் தண்ணீர் துர்நாற்றம் வீசிவருகிறது. மேலும் கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்பதால் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் படகு சவாரியை சுற்றி உள்ள இரும்பு வேலியை சரி செய்ய வேண்டும் எனவும் மேலும் தண்ணீரில் மிதக்கக்கூடிய குப்பைகளையும், காலி வாட்டர் கேன்களையும் சுத்தம் செய்து தண்ணீரை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.