கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட பெரியார் புலிகள் காப்பகம் பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன புள்ளி மான்கள் பயந்த சுபாவம் கொண்டது ஆதலால் சுற்றுலா பணிகள் கண்டால் ஓடி மறைந்துவிடும் வனப்பகுதிகுள் வனத்துறையினர் புள்ளிமான் அருகில் செல்லக்கூடாது புகைப்படம் எடுக்கக் கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்துள்ளனர் இந்த வனப் பகுதியில் உள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட புள்ளி மான்கள் உள்ளதால் வனத்துறையினர் இதுக்கு வசிக்கும் பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாப்சிலிப்படையாக பரம்பிக்குளம் சென்ற சுற்றுலா பயணி ஒருவர் தனது காரில் அமர்ந்தபடி வனப் பகுதியில் இருந்த புள்ளி மானிடம் மலையாளத்தில் பரம்பிக்குளம் எப்படி செல்ல வேண்டும் என கேட்ட பொழுது புள்ளிமான் பரம்பிக்குளம் இருக்கும் இடத்தை நோக்கி தலையாட்டியது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி அருகே புலிகள் காப்பகத்தில்….தலையாட்டி வழி சொன்ன புள்ளிமான்
- by Authour
