Skip to content

தஞ்சையில் ரூ. 6லட்சம் மதிப்புள்ள 8 பைக்குகளை திருடிய வாலிபர் கைது….

தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, புதிய பஸ் நிலையம், தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பழைய பஸ் நிலையம் மற்றும் தஞ்சை தெற்கு, தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலைய பகுதிகளில் பைக்குகள் அடிக்கடி திருட்டு போயின. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் திருடனை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் பைக்குகள் திருட்டு போன பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் அடிப்படையிலும் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் தஞ்சை மருத்துவக்ககல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் புதிய பஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பைக்கில் சந்தேகப்படும்படியாக வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரிசாலையில் உள்ள காமராஜர் சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழரசன் (32) என்பதும், பல்வேறு இடங்களில் பைக்குகளை திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், தமிழரசனை கைது செய்து அவரிடம் இருந்து 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளின் மதிப்பு ரூ.6 லட்சம் ஆகும்

error: Content is protected !!