Skip to content
Home » அரியலூரில் கட்டு 400 – ஜோடி 150 … கட்டுபடியாகாத விலையில் கரும்பு வியாபாரம்…

அரியலூரில் கட்டு 400 – ஜோடி 150 … கட்டுபடியாகாத விலையில் கரும்பு வியாபாரம்…

  • by Authour

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் திருவிழா நாளை 14ம் தேதி சூரிய பொங்கலும், 15ம் தேதி உழவர் திருநாளாகவும், 16ம் தேதி காணும் பொங்கலாகவும் ஆகிய மூன்று தினங்களில் கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் அனைத்து வீடுகளிலும் பொங்கலிட்டு இறைவனை வழிபடுவதும், தங்களை வாழ்வித்த உழவுக்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவித்து அவர்களை போற்றுவதாகவும், சுற்றத்தார் நண்பர்களுடன் இணைந்து அவர்களைக் கண்டு தங்களது மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொள்ளும் காணும் பொங்கல் ஆகவும் இந்த மூன்று நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளை கொண்டாட பொதுமக்கள் தங்கள் வீடுகளை அலங்கரித்து புது பானையில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இப்பண்டிகையில் முக்கியமாக பூஜையின் போது கரும்புகளை வைத்து வழிபடுவது வழக்கம். தற்பொழுது அனைத்து ரேஷன் கடைகளிலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு செங்கரும்பு வழங்கப்படுகிறது. பூஜையில் வைப்பதற்கு இரண்டு கரும்புகள் தேவை என்ற நிலையில்

பொதுமக்கள் மேலும் ஒரு கரும்பினை வாங்குவதற்கும் சீர் கொடுப்பதற்கு கட்டாகவும் கரும்புகளை வாங்குகின்றனர்.

கடந்த மாதம் பெய்த நல்ல மழையால் கரும்புகள் நல்ல ஊட்டச்சத்துடன் வளர்ந்துள்ளன. நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் வயலில் விளைந்த கரும்புகளை விற்பனை செய்துள்ளனர். விவசாயிகளிடம் இருந்து இக்கரும்புகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள் ஒரு கட்டு கரும்பு 400 ரூபாய்க்கும் ஜோடி கரும்பு 150 ரூபாய்க்கும் அரியலூரில் விற்பனை செய்து வருகின்றனர். கருப்பு விலையை கேட்டவுடன் சற்று பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தாலும் திருமணமான தங்கள் பெண்களுக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக கட்டு கரும்புகளை வாங்கி செல்கின்றனர். மேலும் தங்கள் வீடுகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாட கொண்டாட ஜோடி கரும்புகளையும் விலையை பொருட்படுத்தாமல் வாங்கி செல்கின்றனர். அரியலூர் கடைத்தெருவில் செங்கரும்பு மஞ்சள் கொத்து வாழைப்பழம் தேங்காய் மற்றும் காய்கறிகள் பரபரப்பாக விற்பனையாகின்றன. இப்பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாண்டு பொங்கலை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர்.