திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கலை நிகழ்சிகளுடன் விழா தொடங்கியது. கல்லூரியில் வளாகத்கில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கல்லூரி சேர்மன் ஆண்டி மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலை கொண்டாடினர். பிரின்ஸ்பல் ஸ்ரீதர் அணைவரையும் வரவேற்றார். கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ ர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. பின்னர் அனைவருக்கும் பொங்கல் மற்றும் கரும்புகள் வழங்கப்பட்டு சமத்துவ பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது