கடலூரைச் சேர்ந்த பிரின்ஸ்(22) என்ற பெண் தன் கணவருடன் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில்
அப்பகுதியில் வேலை செய்த மற்றொரு நபருடன் (திவாகர் )கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இது பிரின்ஸ் கணவருக்கு தெரிய வர கள்ளக்காதலை விட்டு விடும்படி மனைவியிடம் கூறி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது. இது சம்பந்தமாக கள்ளக்காதலன் திவாகரிடம் இனிமேல் என்னை விட்டு விடு என கூறியுள்ளார். கோபமடைந்த திவாகர் மதுரையைச் சேர்ந்த தன்னுடைய நண்பன் தினேஷ்க்கு போன் செய்து கார் ஒன்றை எடுத்து வர சொல்லியிருக்கிறார். உடனே மதுரையில் இருந்து மாருதி ஆம்னி காரை தினேஷ் எடுத்து வந்துள்ளான். பிரின்ஸ்க்கு போன் செய்த திவாகர் வேனில் வருமாறு கூறியுள்ளார். திவாகர் கூறியதை நம்பிய பிரின்ஸ் ஆம்னி வேனில் ஏறியுள்ளார். காரில் பேசிக்கொண்டிருந்த திவாகர் திடீரென பிரின்சின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். ஆம்னி வேனில் கீழே பிரின்ஸ்சை படுக்க வைத்த இருவரும் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உடலை புதைக்க முடிவு செய்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள டிராக்டர் கம்பெனி ஆம்னி வேனை நிறுத்தி விட்டு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது இரவு நேர ரோந்து பணியில் இருந்த மதுரை மாவட்டம் வாடிப்பட்டி போலீசார் சந்தேகத்தின் பேரில் காரின் அமர்ந்து இருந்த திவாகர் மற்றும் தினேஷ் இருவரையும் பிடித்து விசாரித்துள்ளனர். மேலும் ஆம்னி வேனை திறந்து பார்த்த போலீசார் அதன் உள்ளே பெண் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து விசாரணையில் கள்ளக்காதலி பிரின்ஸ்சை நண்பன் தினேஷ் உதவியில் திவாகர் கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.