Skip to content
Home » உணவை ஊட்டிவிட்டு மாறி மாறி அன்பை பொழிந்த இளையராஜா-யுவன்!….

உணவை ஊட்டிவிட்டு மாறி மாறி அன்பை பொழிந்த இளையராஜா-யுவன்!….

இசையமைப்பாளர் இளையராஜா நேற்று முன் தினம் மொரீஷியஸ் சென்றிருப்பதாக பதிவிட்டிருந்தார். மொரீஷியஸ் தீவில் கடற்கரையைப் பார்த்தபடி ரிலாக்ஸ் செய்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்தார் இளையராஜா. இப்போது அவருடன் மகன், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்திருக்கிறார்.

அங்கு ரெஸ்டாரண்ட் ஒன்றில் யுவனுக்கு உணவு ஊட்டும்படியான போட்டோ ஒன்றைப் பகிர்ந்து யுவனும் மொரீஷியஸ் வந்திருப்பதாக சொல்லி இருக்கிறார் இளையராஜா. யுவனும் தனது அப்பா இளையராஜாவுக்கு உணவு ஊட்டிவிட்டு அன்பைப் பகிர்ந்துள்ளார்.

இப்படி அப்பா- மகன் இருவரும் மாறி மாறி அன்பைப் பகிர்ந்திருக்கும் இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஹார்ட்டின் பறக்க விட்டு வருகின்றனர். ’இசைக்கு உணவு ஊட்டும் யுவன்’ என்றும், ‘இரண்டு லெஜெண்ட்ஸ் ஒரே படத்தில்’ என்றும் கமென்ட் செய்து வருகின்றனர்.

தான் இசையமைத்த பாடல்களுக்கு தனக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது என்று இளையராஜா தொடர்ந்திருக்கும் வழக்கு பேசுபொருளாகி இருக்கிறது.

இதோடு, ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசர் அறிவிப்பிற்காக வெளியாகிய வீடியோவில் தனது இரண்டு பாடல்கள் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளார் இளையராஜா.

இதுகுறித்து ரஜினியிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டபோது, ”அது தயாரிப்பாளருக்கும் இசையமைப்பாளருக்கும் இடையிலான பிரச்சினை” என ஒதுங்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *