Skip to content
Home » இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கண்ணீர் ….. மாற்றுதிறனாளி தாய்..

இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி கண்ணீர் ….. மாற்றுதிறனாளி தாய்..

கரூர் மாவட்டம், சேங்கல் அடுத்த வடவம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயஜோதி (37). இளம் வயதில் கண் பார்வை இழந்தவர். இவரது கணவர் சக்திவேல் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துள்ளார். இவருக்கு கௌசல்யா (6) கனிஷ்கா (4) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு உதவிக்காக மனு அளித்த ஜெயஜோதியின் ஆதார் அட்டை நகலை கொண்டு வந்து கொடுக்குமாறு சில தினங்களுக்கு முன்பு மாற்றுதிறனாளிகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதார் அட்டை நகல் கொண்டு வர சொல்லி கூறி உரிய காரணம் தெரியாமல் கணவனை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் கண் பார்வை இழந்த ஜெயஜோதி, தனது 2 பெண் குழந்தைகளுடன் 35 கிலோமீட்டர் தூரம் இரண்டு பேருந்துகளில் மாறி பயணித்து அரசு பஸ் மூலமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைத்து வரும் சூழலில், கணவனை இழந்து ஆதரவின்றி தவிக்கும் தனக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரியும், இலவச வீடு வழங்கக் கோரியும் கண்ணீர் மழ்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர்  பிரபுசங்கர் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வழி செய்தும் இருக்கைகள் வைத்து அதில் நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்று குறைகளை தீர்த்து வருகிறார்,குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக நலத்திட்டங்களை செய்து வரும் மாவட்ட கலெக்டர். சாமி வரம் கொடுத்தாலும், பூசாரிகள் செய்வதில்லை என்று சொல்வதைப் போல,

மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். ஆனால் கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை அதிகாரிகள் மெத்தன போக்குடன்
கணவனை இழந்து இரண்டு பெண் குழந்தைகளுடன் பார்வையில்லாமல் பரிதவிக்கும் பெண்ணை
அலைக்கழிப்பு செய்து வருகின்றனர். அதில் பால்வாடி படிப்பு நான்கு வயது குழந்தையும் கண்கள் தெரியாத தனது தாயையும் ஆறு வயது ஆகிய பெரிய பெண் குழந்தை கௌசல்யா அரசு பள்ளி சீருடையில் அழைத்த வந்த சம்பவம்,முறையான பராமரிப்பு இல்லாத சிறிய குழந்தையின் உடை ஆகியவற்றை பார்க்கும்போது பார்ப்போரை கண் கலங்க வைக்க செய்தது.

இந்த ஆதரவின்றி இருக்கும் இரண்டு குழந்தைகள் எப்படி இருக்குமோ என்று தன் தாய்க்கு தெரியாதா,தாயின் ஏக்கம்,அந்த இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் என்ன என்று கேள்வி குறியுடன் உள்ள அந்த தாய்,இரண்டு கண்களும் தெரியாத தாயின் குழந்தைகளின் எதிர்காலத்தை மாவட்ட கலெக்டர் தலையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *