தஞ்சை மாவட்டம், பாபநாசம் – சாலியமங்களம் சாலையில் இள நிலை மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது. இதில் நிரந்தரப் பணியாளர்கள், பகுதி நேரப் பணியாளர்கள் பணி புரிகின்றனர். இந்த அலுவலக கட்டடத்தின் வெளியிலுள்ள மேற் கூரை சில இடங்களில் சிமெண்ட் காரைப் பெயர்ந்து, கம்பிகள் வெளித் தெரிகின்றன. சில இடங்களில் சிமெண்ட் காரை பெயரக் கூடிய நிலையில் உள்ளது. இந்த கட்டடம் கட்டி இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாவதால் மழை நீர் கசிகின்றது. பணியாளர்களும்
பயத்துடனே பணியில் உள்ளனர். ஈ.பி பில் கட்ட வரும் பொது மக்கள் பயத்துடனே வந்துச் செல்கின்றனர். பழுதடைந்த நிலையில் உள்ள இந்த கட்டடத்தை இடித்து விட்டு தரமான முறையில் புதிதாக கட்ட வேண்டும் என்பது தான் அலுவலகத்திற்கு வந்துச் செல்லும் பொது மக்களின் எதிர்ப் பார்ப்பாகும்.