தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நியமன போட்டித்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நான்காம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 2017, 2019, 2023-ம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 41 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதினர். 2013-14-ம் கல்வி ஆண்டில் கடைசியாக 14 ஆயிரத்து 256 பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பிப்ரவரி மாதம் தான் நியமனத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை மாத நிலவரப்படி 5 ஆயிரம் 620 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் வெறும் 2 ஆயிரத்து 222 ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே நீ என்ன தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான எந்த ஒரு தேர்வு நடத்தப்படாத நிலையில் தற்போது நடைபெற்றுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமன தேர்வில் காலி பணியிடங்கள் மிக குறைவான அளவிலேயே உள்ளதால் அதை அதிகரிக்க வலியுறுத்தி தமிழக முழுவதும் இருந்து நியமன தேர்வில் வெற்றி பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கோரிக்கை மனு அளிக்க வந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் அவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை மனு பெட்டியில் போட்டு சென்றனர்.