Skip to content
Home » இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்…மீனவர்களுக்கு கலெக்டர் ஆறுதல்….

இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல்…மீனவர்களுக்கு கலெக்டர் ஆறுதல்….

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஆற்காட்டுதுறை, வெள்ளபள்ளம் மீனவர்களை அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் நடுக்கடலில் தாக்குதல் நடத்தி அவர்களது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்கள் gps கருவிகளை பறித்து சென்றனர். இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தில் ஆற்காட்டுதுறை வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 8,க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து நாகை மற்றும் வேதாரண்யம் அரசு  ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே தலை கை கால் மற்றும் முகங்களில் வெட்டு காயம்பட்ட ஆற்காட்டுத்துறையை சேர்ந்த பாஸ்கர், அருள்ராஜ் மற்றும் வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அருள்வேல் ஆகிய மீனவர்களை மாவட்ட ஆட்சியர்

ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நாகை அரசு மருத்துவமனையில் அவர்களை சந்தித்து தாக்குதல் குறித்து கேட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நிவாரணம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!