தமிழக முன்னால் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது.. பொங்கல் பண்டிகை என்றால் ஜல்லிக்கட்டு போட்டி முக்கிய மானதாகும் . திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிகட்டாக சூரியூரில் நடப்பது சிறப்பாகும் ஜல்லிகட்டு போட்டி அதிக அளவில் நடத்த அரசு துணை நிற்க வேண்டும்.
ஒரு ஜல்லிகட்டு போட்டி நடத்துவது என்பது 20 கல்யாணம் நடத்துவதைவிட கஸ்டம் ஜல்லிகட்டு போட்டி ஏற்பட்டு செய்து உள்ளனர். கூடுதலாக பாதுகாப்பு வழங்க வேண்டும். ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுகளுக்கு ஆண்லைன் டோக்கன் வழங்கினால் ஒரே நேரத்தில் மாடுகள் வந்து குவிவது தவிர்க்கப்படும்.
அவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள பதிவு எண்ணிற்கு ஏற்றவாரு குறித்த நேரத்தில் வந்தால் இதை வழியுறுத்துகிறோம். சில இடங்களில் உள்ளது எல்லா இடங்களிலும் வர வேண்டும். ஜல்லிகட்டு போட்டி நடைப்பெறுவதற்கு விழா கமிட்டி மாட்டின் உரிமையாளர் மாடுபிடி வீரர் என அனைவரும் ஒத்து உழைக்க வேண்டும்.
இலங்கையில் ஜல்லிகட்டு போட்டி நடப்பது பாராட்டுக்கு உரியது கடல் தாண்டி தமிழனின் பெருமை பறைசாற்றப்படுவது சிறப்பானது ஆகும்.
கடல்கடந்து நடந்த ஜல்லிகட்டு போட்டியில் இந்த ஆண்டு நடந்து கொள்ள முடிய வில்லை அடுத்த ஆண்டு கலந்து கொள்வேன் நம் மக்கள் பலர் கலந்து கொண்டு உள்ளனர். உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி ஜல்லிகட்டு போட்டி நடைப்பெற வேண்டும். எல்லா இடங்களிலும் ஜல்லிகட்டு போட்டி நடைப்பெறுவது ஜல்லிக்கட்டு உரிமையாளர் மற்றும் ஜல்லிகட்டு ஆர்வலர் என்ற முறையில் பெருமை கொள்வதாக கூறினார்.