தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இலங்கையின் எல்லை பகுதியான கச்சத்தீவு அருகே மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் அவ்வபோது கைது செய்வது தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 07ம் தேதி நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 10 பேரும் நீதிமன்றாத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களின் நீதிமன்ற காவல் நிறைவடைந்தது தொடர்ந்து அவர்கள் இன்று மீண்டும் திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், நாகை மீனவர்கள் 10 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனையடுத்து நாகை மீனவர்கள் 10 பேரும் இந்திய தூரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதன் காரணமாக மீனவர்கள் 10 பேரும் விரைவில் இந்தியா திரும்புவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.