தஞ்சாவூர் முனிசிபல் காலனியில் இயங்கி வரும் (நீலகிரி) மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது. விழாவில் இலக்கிய மன்ற போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடந்தது. விழாவில் மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவிகள் துர்காஸ்ரீ, அப்ரா பேகம், சுபரட்சகி ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மூர்த்தி தனது சொந்த பணத்திலிருந்து தலா ரூ.2 ஆயிரம் பரிசு அறிவித்தார். இந்த பரிசை மாணவிகளுக்கு புதுக்குடி ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரஜோதி வழங்கி பாராட்டினார். விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இடைநிலை ஆசிரியை ஷீலா நன்றி கூறினார்.