தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.2.2023) தலைமைச் செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள “இலக்கிய மலர் 2023″ என்ற சிறப்பு மலரினை வெளியிட, அதன் முதல் பிரதியை தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, , இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிகளை சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர். எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் புகழ்பெற்ற ஓவியர் டிராட்ஸ்கி மருது ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு.இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (4.2.2023) தலைமைச் செயலகத்தில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என். ஸ்ரீதர், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. வளர்மதி, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி. ஷஜீவனா, விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் . ஏ.பி. மகாபாரதி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் காடா. கார்த்திகேயன், விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ. ஜெயசீலன், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் க. கற்பகம், திருவாரூர் மாவட்ட
ஆட்சித் தலைவர் திருமதி தி. சாருஸ்ரீ, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. ரவிச்சந்திரன், ஆகியோருடன் உரையாடினார். உடன் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.பட, பொதுத்துறை செயலாளர் முனைவர் டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.