மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹர்ஷ் வர்தன் (26). இவர், கர்நாடகாகேடராக 2023 ஐபிஎஸ் பேட்சில் பயிற்சி பெற்றுள்ளார். சமீபத்தில் தான், தனது நான்கு வார பயிற்சியை மைசூருவில் உள்ள கர்நாடகா போலீஸ் அகாடமியில் முடித்தார்.
இந்நிலையில் நேற்று, ஹோலேநரசிபூரில் புரபேஷனரி உதவிக் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்பதற்காக ஹாசன் மாவட்டத்திற்கு போலீஸ் வாகனத்தில் ஹர்ஷ் வர்தன் (Harsh Bardhan) வந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஹாசன் மற்றும் மைசூரு நெடுஞ்சாலையின் கிட்டானே எல்லைக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது வாகனத்தின் டயர் திடீரென வெடித்துள்ளது.
இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், வீடு மற்றும் மரத்தின் மீது மோதியுள்ளது. இதில், டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது மற்றும் ஹர்ஸ் வர்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹர்ஸ் வர்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், ஹர்ஸ் வர்தன் மறைவுக்கு கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா இரங்கல் தெரிவித்துள்ளார்