இந்திய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி துவக்க நிகழ்ச்சி திருச்சி மேலபுதூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து கலந்துக்கொண்டு தகவல் தொழில்நுட்ப அணியை தொடங்கி வைத்தார். பின்பு லோகோவையும்
அறிமுகம் படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவண்ணாமலை, சேலம், கரூர், புதுக்கோட்டை, திருப்பூர் , உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.