திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், இன்று புதுகை எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார். அங்கு அவர் ஆய்வுபணி மேற்கொண்டார். பின்னர், இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களின்குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சமூக விரோதி களைகண்டுபிடிப்பதற்காக அமைக்கப்பட்ட
காவல்கூடுதல்கண்காணிப்பாளர் ரமேஷ்கிருஷ்ணன் தலைமையிலான 2காவல்துணைக்கண்காணிப்பாளர்கள்,4காவல்ஆய்வாளர்கள்,4உதவி ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது திருச்சி டிஐஜி சரவணசுந்தர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டேஉடனிருந்தனர்.