Skip to content

கரூரில் அதிக லாபம் தருவதாக ரூ. 30 லட்சம் மோசடி செய்த நபர் கைது…

கரூர் மாவட்டம், பாரதி நகரில் வசிக்கும் பாலமுருகன், என்பவர் கரூரில் தனியார் சிவில் இன்ஜினியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கடந்த 2021 ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம்,களத்தூரை சேர்ந்த பிரபு, 41 என்பவர் இயக்குநராக இருந்து கொண்டு அவர் நடத்திவரும் GSDL வைபவ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி மற்றும் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறியதை நம்பி பாலமுருகன் இரண்டு தவனைகளாக ரூபாய் 20,00,000/- முதலீடு செய்தும், இதேபோல் அரியலூர் மாவட்டம், தத்தனூர் கிராமத்தை சேர்ந்த கலைவாணன் என்பவரிடம் 3  தவணைகளாக ரூ. 30,00,000/- பெற்றும், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி பிரபு குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் தலைமறைவான வழக்கின் பிரபுவை இன்று கைது செய்து, விசாரணை மேற்கொண்டு கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இவரது வங்கி கணக்குகளை முடக்கம் (Freeze) செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வௌியாகியுள்ளது.

error: Content is protected !!