நகைச்சுவை நடிகர் ராமர் நடித்துள்ள அது வாங்கினால் இது இலவசம் திரைப்படத்தை ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்காக ராமர் கரூர் வருகை உற்சாக வரவேற்பு அளித்தனர். அது வாங்கினால் இது இலவசம் என்ற திரைப்படம் இன்று வெளியானது எஸ்.கே.செந்தில் ராஜன் இயக்கிய நகைச்சுவை தமிழ் திரைப்படமாகும், இதில் விஜய் டிவி, நகைச்சுவை நடிகராக வலம் வந்து வரும் ராமர் மற்றும் பூஜா ஸ்ரீ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை ஆர்வின் ராஜ் இசை அமைத்துள்ளார்,
திரைப்படம் இன்று 14 பிப்ரவரி 2025 தேதி திரையரங்குகளில் வெளியானது இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் கலையரங்கம் திரையரங்கில் இப்படம்
வெளியானதை முன்னிட்டு படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள விஜய் டிவி, நகைச்சுவை நடிகராக வலம் வரும் ராமர் திரையரங்கிற்கு வருகை தந்தார் அவருக்கு பட்டாசு வெடித்து, தாரை தப்பட்டை உடன் சால்வை மற்றும் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் படத்தை காண்பதற்காக அனைவரும் ஆர்வத்துடன் சென்றனர்.