லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர். யூடியூப் பேட்டிகளில் பிரபலமான இவர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானார்.
இவர்களது உறவு நீண்ட நாள் நிலைக்காது என்று இவர்கள் திருமணம் பேசுபொருளாக மாறியது. அத்துடன் இருவருமே சீக்கிரத்தில் பிரிந்து விடுவார்கள், பொருத்தமில்லாத ஜோடி என நிறைய விமர்சனங்களும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், சமீபத்தில் திருமணமாகி ஒரு வருடம் ஆகிவிட்டது என இந்த ஜோடி திருமண கொண்டாட்டப் புகைப்படத்தைப் பகிர்ந்து ஒரு நீண்ட பதிவும் போட்டி
ருந்தனர்.
இதற்கிடையில் பணமோசடி வழக்கில் சிக்கிய ரவீந்தர் சந்திரசேகர் ஜாமீனில் வெளியே வந்தார். வெளியே வந்ததும் வழக்கம் போலத் தனது பணிகளைப் பார்த்து வருகிறார்.
அந்த எபிசோடில்தான் அவர் ஆக்சிஜன் மாஸ்க்குடன் வந்து அந்த நிகழ்ச்சி குறித்து பேட்டி கொடுத்தார். தனக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக ஒரு வாரம் அவர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறியுள்ளார். விரைவில் உடல்நலன் தேறிவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஐசியுவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.