இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.. சித்ரா விஜயன் ஐ.ஏ.எஸ், தமிழக மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாகவும், ரமண சரஸ்வதி ஐ.ஏ.எஸ், தமிழக பைபர்நெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எம். பிரதாப் ஐ.ஏ.எஸ், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் துணைச் செயலாளர் பொறுப்புடன், தமிழக பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட அதிகாரி பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். ஸ்ரேயா பி சிங் ஐ.ஏ.எஸ், தமிழக மகளிர் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்புடன் தமிழக ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.