தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் 57 பேரையும் கவுரவிக்கும் வகையில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) சென்னை அண்ணா நிர்வாக பயிற்சி மையத்தில் தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடக்கிறது. இந்த தகவலை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
சென்னை செனாய் நகரில் 500 மாணவா்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில் ஐஏஎஸ் பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.