ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இந்த தேர்வில் மொத்தம் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 335 பேர் பொதுப்பிரிவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பிரிவில்(economically weaker section) 109பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உ.பி. மாநிலம் பிரயாக்ராஜ் நகரை சேர்ந்த சக்தி துபே என்பவர் இந்தியாவில் முலிடம் பிடித்தார். ஹர்சிதா கோயல் 2ம் இடமும், டோங்ரே அர்ச்சித் 3ம் இடமும் பிடித்தனர்.
தமிழகத்தை சேர்ந்த சிவசந்திரன் அகில இந்திய அளவில் 23வது இடத்தையும், தமிழ்நாட்டில் முதலிடத்தைறெ்றுள்ளார். இவர் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மோனிகா அகில இந்திய அளவில் 39வது இடத்தை பெற்றுள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் பயறிச்சி பெற்ற 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்கதக்து.
தமிழில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கரபாண்டியன் ஆகியோரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 134 பேர் நேர்முகத்தேர்வுக்கு சென்றார்கள். இவர்களில் 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
