தமிழ்நாட்டில் இன்று ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:
இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளராக இருந்த மணிவாசன் நீர்வளத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார்.
நீர்வளத்துறை முதன்மை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா காகிதத்துறை முதன்மைசெயலாளராக மாற்றப்பட்டார்.
பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் சுற்றுலா மற்றும் இந்து அறநிலையத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார்.
கூடுதல் தலைமை செயலாளரும், கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை , மீனவர் நலத்துறை முதன்மை செயலாளருமான மங்கத்ராம் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளராக மாற்றப்பட்டார்.
ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துறை ராஜ் முதன்மை செயலாளர் டாக்டர் செந்தில் குமார் வனத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டார்.
வனத்துறை முதன்மை செயலாளர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். அந்த பதவியில் இருந்த கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச்செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ்உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளராக மாற்றப்பட்டார்.
நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக டாக்டர் ஆர். செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு அரசு கேபிள்துறை நிர்வாக இயக்குனர் ஜான் லூயிஸ் சமூக பாதுகாப்பு திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் எம். விஜயலட்சுமி இந்தி்ய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனராக நியமிக்கப்படுகி்றார்.
நில சீர்திருத்தத்துறை ஆணையர் டாக்டர் என். வெங்கடாசலம்,காப்பகங்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
எய்ட்ஸ் கட்டுப்பாடு சொசைட்டி திட்ட இயக்குனர் மற்றும் உப்பினர் செயலராக இருக்கும் டிஎன் ஹரிஹரன், நில சீர்திருத்தத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.
நகராட்சி நிர்வாகத்துறை மற்றும் குடிநீர் வழங்கல்துறை சிறப்பு செயலாளர் ஆர். லில்லி, போக்குவரத்து துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு காகிதத்துறை முதன்மை செயலாளர் சாய்குமார் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழக சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு உப்பு வாரிய தலைவராக டாக்டர் சி.என்.மகேஸ்வரன் நியமிக்கப்படுகிறார்.
செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் டாக்டர் வைத்திநாதனுக்கு, கூடுதலாக அரசு கேபிள் நிறுவன நிர்வாக இயக்குனர் பொறுப்பு வழங்கப்படுகிறது.
வேளாண்மை நவீனமயமாக்கும் திட்ட இயக்குனர் டி. எஸ் ஜவஹரிடம், சமூக சீர்திருத்தத்துறை செயலாளர் பதவி கூடுதலாக வழங்கப்படுகிறது.
சந்தீப் சக்சேனா, சாய்குமார், சி. என். மகேஸ்வரன் அயல்நாட்டு பணிக்கான ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
மேற்கண்ட உத்தரவினை தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.