தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை செயலாளராக இருப்பவர் டாக்டர் பீலா ராஜேஷ். இவர் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றம் செய்து உள்ளார். இது தொடர்பாக அவர் பத்திரிகையிலும் விளம்பரம் செய்து அறிவிக்கை வெளியிட்டு உள்ளார். இவரது கணவர் தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ். இவர் பாலியல் வழக்கு ஒன்றில் சிக்கி தண்டனை பெற்றுள்ள நிலையில், பீலா தற்போது தனது தந்தையின் பெயரை தன் பெயரோடு சேர்த்து உள்ளார். இவரது தந்தை வெங்கடேசனும் முன்னாள் டிஜிபி ஆவார்.