இந்தியாவில் ஆண்டுதோறும் ஐஏஎஸ் , ஐபிஎஸ் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பிரிலிமினரி தேர்வு ஜூன் 16ம் தேதி நடந்தது. இதில் சுமார் 8 லட்சத்துக்கு அதிகமானோர் தேர்வு எழுதினர். அவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றனர். மெயின் தேர்வு செப்டம்பர் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடந்தது. அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் UPSC ,இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். டில்லியில் நடைபெறும் நேர்முகத்தேர்விலும் வெற்றி பெற்றால், அவர்கள் பெற்ற மார்க் அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியிடங்கள் ஒதுக்கப்படும்.