தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலவரம், அரசு திட்டங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து ஆண்டுதோறும் முதல்வர் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெறும். முதலில் தனித்தனியாகவும், அதன்பிறகு கூட்டாகவும் நடத்தப்படும் மாநாட்டின் தொடக்கத்திலும், நிறைவிலும் முதல்வர் உரையாற்றுவார்.
இந்த ஆண்டுக்கான மாநாடு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வனத் துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். இதில் அமைச்சர்கள், தலைமைச்செயலாளர் ஆகியோரும் பங்கேற்றனர். நாளை நடைபெறும் மாநாட்டில் கலெக்டர்கள் மட்டும் பங்கேற்பார்கள்.
2 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் மாவட்ட நிர்வாகம், சட்டம் -ஒழுங்கு நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் விரிவாக ஆய்வு மேற்கொள்கிறார்.
மாநாட்டை தொடங்கிவைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
மக்கள் நலனுக்கான ஆலோசனைகள் வழஙு்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தக்க பாதுகாப்பு போடவேண்டும். அமைதியை நிலைநாட்ட வேண்டும். கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழப்பம் அளிக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிக்க கூடாது. சாலை விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.