கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ,மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் நடந்த விழாவில் பரிசுகளை வழங்கினார். விழாவில் முதல்வர் பேசியதாவது:
மேடைகளில் பேசுபவர்கள் தங்களுக்கென தனி பாணி கொண்டிருப்பார்கள். இளம் பேச்சாளர்கள் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கக்கூடிய பெரும் பரிசு. இளம் பேச்சாளர்களின் உரைகள் வருங்காலங்களில் பலருக்கும் கையேடாக இருக்க வேண்டும். பகுத்தறிவு கருத்துகளை பட்டென சொன்னவர் பெரியார். கனல் தெறிக்கும் வசனங்களை பேசி தமிழர்களுக்கு உணர்வூட்டியவர் கருணாநிதி,
எப்போதும் நான் சுறுசுறுப்பாக இருக்க ஊக்கம் கொடுப்பவர்கள் மாணவர்களே. வரலாறு போற்றக் கூடிய பேச்சாளர்களை உருவாக்கும் தளம் தான் பேச்சுப்போட்டி. தலைநிமிரும் தமிழகம் என்ற எண்ணத்தை அனைவரிடம் கொண்டு சேர்க்கவே போட்டி நடத்தப்படுகிறது. இளம் பேச்சாளர்களை கண்டறிந்து ஊக்குவித்து வருகிறோம். நான் ஓரளவுக்கு பேசுவதற்கு காரணம் பீட்டர் அல்போன்ஸ் தான்.
திராவிட இயக்கம் பேசி, பேசி, எழுதி, எழுதி வளர்ச்சியடைந்திருக்கும் இயக்கம் சிறுபான்மையினர் நலனுக்காக ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. 14 சிறுபான்மை நல கல்லூரி விடுதிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற சிறுபான்மை மாணவர்கள் இடைநின்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சிறுபான்மையினர் நலனுக்காக ஏராளமான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டுக்கு சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் சுயமரியாதை, பகுத்தறிவு என தனி அடையாளம் உண்டு. பண்பட்ட தமிழ் அறிவை எல்லா மாணவர்களும் பெற வேண்டும். மாணவர்களே ஒற்றுமை, நல்லிணக்கம், மனிதநேயத்தை போற்றுங்கள்; எண்ணங்களை அழுக்காக்கும் எண்ணங்களை புறந்தள்ளுங்கள் . திமுக கூட்டங்களை மாலை நேர கல்லூரிகள் என்று அழைப்பது உண்டு .
இவ்வாறு முதல்வர் பேசினார்