Skip to content

கொடநாடு வழக்கு: உண்மையை கூறினேன்- சுதாகரன் பேட்டி

ஜெயலலிதாவின் கொடநாடு  எஸ்டேட்டில் 2017ல் கொலை கொள்ளை நடந்தது. காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் உதகை போலீஸார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு  சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவர் இன்று காலை கோவையில் உள்ள சிபிசிஐ அலுவலகத்தில்  விசாரணைக்கு ஆஜரானார்.

கொடநாடு எஸ்டேட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக அவரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்த சுதாரன், எனக்கு தெரிந்த உண்மைகளை கூறினேன், கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தேன் என்று கூறினார்.

 

 

error: Content is protected !!