Skip to content

எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார்…. ஓபிஎஸ் பேட்டி

  • by Authour

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செலம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

2026-ல் ஒன்றிணைந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வாழ்வு.இல்லையென்றால் அனைவருக்கும் தாழ்வுதான். எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி. தினகரன், சசிகலா ஆகியோர் அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம்.

செங்கோட்டையன் விசுவாசமானவர்… எந்த நிலையிலும் கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் அவர். செங்கோட்டையன் மீது எந்த அதிருப்தியும் எங்களுக்கு இல்லை.

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறவரை 10 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டதைத்தான்  தவறு என்று நாங்கள் கோர்ட்டில் வழக்காடி கொண்டிருக்கிறோம். அதை தீர்வுக்கு கொண்டு வருகிற பொறுப்பும் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது என்று சொன்னோம்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னார். கோர்ட்டுக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ. அதே அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கும்  இருக்கிறது என்று ஒரு தீர்ப்பு உள்ளது.

நடிகர் விஜய் குறித்து கேள்வி கேட்க பத்திரிகையாளர்கள்,  நடிகர் விஜய் என ஆரம்பித்தவுடன், ஓபிஎஸ்,      ஐயோ சாமி, சரணம் ஐயப்பா என்று  கூறிய ஓபிஎஸ், அரசியல் களத்தில் விஜய் எந்த இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் என்பதுதான் முக்கியம். தமிழர்களின் நலன், பாரம்பரியம், அனைத்து மக்களையும் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒரே பார்வையில் பார்க்கும்நோக்கம் ஆகியவை அவரிடம் இருக்கிறதா? ஆகியவை அவரது வெற்றி தோல்வியை உறுதி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

error: Content is protected !!