சென்னை கிண்டி அரச மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி என்பவரை நோயாளியின் மகன் விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தினார்.அவரை போலீசார் கைது செய்தனர். கத்திகுத்துப்பட்ட டாக்டர் பாலாஜிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை அவரை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து டாக்டர் பாலாஜி ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் நலமுடன் இருப்பதாக கூறி உள்ளார். அவருக்கு ஏற்கனவே இருதய செயல்பாட்டுக்காக பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டு உள்ளதால், அதன் செயல்பாடுகள் மட்டும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். இன்று காலை டாக்டர் உணவு அருந்தினார். மற்ற டாக்டர்களும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர்.