Skip to content
Home » நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

நான் தான் அதிமுக- தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு

  • by Authour

இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

உரிமையியல் வழக்கின் தீர்ப்பு வரும் வரை எடப்பாடி பழனிசாமியின் கட்சி அதிகாரங்களை திரும்பப்பெற வேண்டும். அதிமுக முதன்மை உறுப்பினர்கள் மூலம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுத்ததே சட்டப்பூர்வமானது.

ஒரு முறை முதன்மை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுத்த கட்சி தலைமை 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும். முதன்மை உறுப்பினர்களால் தேர்வான கட்சித் தலைமையை பொதுக்குழுவின் தீர்மானம் மூலம் மாற்ற முடியாது. தன்னை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடியின் நடவடிக்கை அதிமுகவின் அடிப்படை விதிக்கு எதிரானது, சட்டவிரோதமானது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணத்தின் அடிப்படையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தனக்கே சொந்தம்.

எடப்பாடி தலைமையில் தற்போதுள்ள கட்சி நிர்வாகம் சட்டவிரோதமானது. சட்டவிரோதமாக செயல்படும் தலைமை இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அதிகாரமில்லை. அ.தி.மு.க. கட்சியின் இரட்டை இலை சின்னத்தின் உரிமை தனக்கானது. தன்னிடம் கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் ஒப்படைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.