Skip to content

டில்லி மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்…. அரவிந்த் கெஜ்ரிவால்….

டில்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் கடந்த 02ம் தேதி நடைபெற்றது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகித்தது. தற்போதைய நிலவரப்படி பாஜக 47 இடங்களிலும், ஆம் ஆத்மி 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. 27 வருடங்களுக்கு பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் முதல்வராக வாய்ப்பு? உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், டெல்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்று கொள்கிறேன் என ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், டெல்லி மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். பாஜகவுக்கு வாழ்த்துக்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என நம்புகிறேன். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படுவோம் என கூறியுள்ளார்.

error: Content is protected !!