கோவை மாவட்டம், சூலூர் கலங்கள் பாதையில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறை ஒன்று செயல்பட்டு வருகிறது இந்த நகை பட்டறைக்கு கடந்த வாரம் உயர் ரகக் கார் ஒன்றில் பர்தா அணிந்த பெண் ஒருவர் வந்துள்ளார். அந்தப் பெண் நகைப் பட்டறையில் இருந்த கண்ணனிடம் தன்னிடம் 12 பவுன் நகை இருப்பதாகவும் அதற்கு பதிலாக புது நகையை தரும்படியும் கேட்டுள்ளார். நகையை வாங்கிக் கொண்ட கண்ணன் அதற்கு பதிலாக பத்து சவரன் நகை ஒன்றைக் காட்டியுள்ளார் அப்போது வருதா பெண்ணிடம் வாங்கிய நகையை எடுத்துக்கொண்டு சோதித்துப் பார்ப்பதற்காக பட்டறைக்குள் கண்ணன் சென்றிருக்கிறார் அந்த இடைவெளியை பயன்படுத்தி பர்தா அணிந்த பெண் அங்கிருந்த 10 சவரன் நகையை எடுத்து விட்டு வெளியே சென்று உள்ளார் வெளியே வந்து பார்த்த கண்ணன் மீசை மீது வைக்கப்பட்ட 10 சவரன் நகையையும் அந்த பெண்ணும் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் உடனடியாக இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் புகாரின்
அடிப்படையில் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர் விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தன்ராஜ் என்பவர் இந்த திருட்டு செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது திருடுவதற்காக தனது மனைவியை பயன்படுத்தி இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது பின்னர் சேலம் அன்னதானபட்டியில் பதுங்கி இருந்த தன்ராஜை போலீசார் கைது செய்து திருடி சென்ற ஒரு லட்சம் மதிப்பிலான 10 சவரன் நகையை பறிமுதல் செய்து திருடுவதற்காக பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து தன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.