Skip to content

கள்ளக்காதலிக்காக மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது…. மயிலாடுதுறையில் பரிதாபம்..

மயிலாடுதுறை அருகே சங்கரன்பந்தல், இலுப்பூரில் வசித்து வந்தவர்கள் பஜில் முகமது(60) மர்ஜானா பேகம் (56). மர்ஜனா மேகத்தின் பெயரில் கோடிக்கணக்கான சொத்துக்கள் இருந்துள்ளது. கடந்த 19ம் தேதி மர்மமான முறையில் மர்ஜானா பேகம்வீட்டில் இறந்து கிடந்துள்ளார் . நகை பணம் கொள்ளை போனதாக அவரது கணவர் மஜில் முகமது பொறையார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார், இதுகுறித்து பொறியாளர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மீனவர் வந்து மத்தியான பேகத்தை கொலை செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்றும் உடனடியாக குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் சங்கர் முதல் பகுதியில் கடந்த 21ஆம் தேதி இஸ்லாமிய அமைப்பினர் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தெரிவித்து போராட்டத்தை முடித்து வைத்தனர்.

அக்டோபர் 1ஆம் தேதி அன்று தமுகவினர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்து உடனடியாக குற்றவாளி கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். திடீரென்று நேற்று பஜ்ஜில் முகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். விசாரணையில் வாடகையை மாதா மாதம் லட்சக்கணக்கில் வரும் தொகையை வைத்துக் கொண்டு  செலவு செய்தும் பெண்களுடன் சகவாசம் வைத்திருந்ததை போலீசார் தெரிந்து கொண்டனர்.

பஜில் முகமது தனது மனைவியை விலக்கி வைத்துவிட்டு தான் பழகி வரும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சித்து மர்ஜானா பேகத்தை அடித்து துன்புறுத்தி உள்ளார்….  இதனால் கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் மர்ஜானா பேகம் கொல்லப்பட்டார். கொலையை மறைத்தது விசாரணையில் தெரிய வந்ததாலும்
உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்ததில் கழுத்து நெறிக்கப்பட்டு இறப்பு ஏற்பட்டது தெரியவந்தது, உடனடியாக பொறையார் போலீசார் பஜில் முகமதை கைது செய்து விசாரித்ததில் நடந்த உண்மையை பதில் முகமது ஒத்துக் கொண்டார். பதில் முகமதுவை கைது செய்து சிறையில் அடைத்தனர் . 11 தினங்களாக எந்த முடிவுக்கும் வராமல் இருந்த வந்த வழக்கு கடைசியில் கணவரே தன் மனைவியை கொலை செய்தது அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!