Skip to content
Home » கணவனை தீ வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 3பேர் கைது…

கணவனை தீ வைத்து கொல்ல முயன்ற மனைவி உட்பட 3பேர் கைது…

  • by Authour

மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி கிழக்குத்தெருவை சேர்ந்தவர் பழனிவேல்(70) இவர் கூலிவேலை செய்துவருபவர், தினந்தோறும் வேலைக்குச்சென்று வாங்கிய சம்பளத்தை குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதுவாடிக்கை. கையில் பணம்இல்லாத நேரத்தில் வீட்டில் பணம் கேட்டு தொந்தரவு செய்வார். அவர் குடிப்பதற்குப்பணம் கொடுக்கவில்லை என்றால் தகராறில் ஈடுபடுவார்.  சம்பவ தினத்தன்று மனைவி அஞ்சம்மாளிடம் குடிக்க பணம்கேட்டு தொந்தரவு செய்துள்ளார். வீட்டின் மாடியில் கூரைபோட்டுஅதில் வசித்துவருகிறார். வீட்டில் பணம் கொடுக்கவில்லை என்பதால் இரண்டு மூன்று தினங்களாக தகராறு செய்து வந்துள்ளார். தாத்தா பாட்டிக்குள் தகராறு நடக்கிறது என்று கேள்விப்பட்ட மகள் வயிற்று பேரன் மயிலாடுதுறை படைவெட்டிமாரியம்மன் கோயில் தெருவிலிருந்து 17வயது நிரம்பிய பேரன் வந்து கேட்டுள்ளான்.

மேலும் மற்றொரு மகளான பார்வதி(34), மனைவி அஞ்சம்மாள்(60) ஆகியோரும் சேர்ந்து திட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல், வீட்டில் வைத்திருந்த எண்ணெயை எடுத்து எனக்கு பணம் கொடுக்கவில்லை இந்த கூரைவீடு எதற்கு என்று மண்எண்ணையை கூரைமீது ஊற்றி தீ வைத்துள்ளார்.  இதைக் கண்ட அவரது மகள் பார்வதி அந்த மண்எண்ணை பாட்டிலை பிடுங்கி அப்பாமீது ஊற்றியுள்ளார். பேரன் தாத்தாவை எட்டி உதைத்து செத்துப்போடா என்று திட்டிய நேரத்தில் பழனிவேல் மனைவி அஞ்சம்மாள், தனது கணவரைபிடித்து எரிகிற தீயில் தள்ளிவிட்டார். தீக்காயத்துடன் அலறியதால் அக்கம் பக்கத்தினர் பழனியை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நிலமை கவலைக்கிடமாக இருந்ததால் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து குத்தாலம்போலீசார் வழக்குப் பதிவுசெய்து பழனிவேல்மனைவி அஞ்சம்மாள்(60) மகள் பார்வதி(34) 17 வயது பேரன் ஆகியோர்மீது பழனிவேலை மண்எண்ணைய் ஊற்றிக்கொல்ல முயற்சித்தாக வழக்குப் பதிவுசெய்து 3 நபர்களையும் கைதுசெய்து காவலில் அடைத்தனர். தந்தைமீது மண்எண்ணெய் ஊற்றிக் கொல்லமுயற்சித்த மகள், தீயில் தள்ளிவிட்ட மனைவி அவர்களுக்கு உடந்தையாக இருந்த பேரன் ஆகியோரின் செயல் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *