பெரம்பலூர் மாவட்டம், அடுத்த களரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன் (44) இவரது மனைவி தேவி (39) இருவரும் பெரம்பலூர் வந்து விட்டு, இன்று மாலை களரம்பட்டிக்கு துறையூர் – பெரம்பலூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பைக் ஈச்சம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது, அதிவேகமாக பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் தேவி அணிந்திருந்த சுமார் 5 பவுன் தாலிக் கொடியை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று மறைந்தனர். இது குறித்து புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் காவல் துறையினர் தாலிக்கொடியை பறித்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
