சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோகன் (62). இவருடைய மனைவி நாகேஸ்வரி (57). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த நாகேஸ்வரி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.