தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலினை இன்று (8.08.2023) தலைமைச் செயலகத்தில், ஹுண்டாய் மோட்டார் குழும நிறுவனத்தின் செயல் தலைவர் யூசன் சங் சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழில் முதலீடுகள் குறித்து அப்போது அவர் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். ச. கிருஷ்ணன். வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் . வே.விஷ்ணு, , ஹுண்டாய் மோட்டார் குழும நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் . ஜேஹுன் சினாங் தலைவர் மற்றும் முதன்மை தொழில்நுட்ப அலுவலர் யோங்வா கிம் , ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் உன்சூ கிம், செயல் இயக்குநர் (பெருநிறுவன விவகாரங்கள்) டோசிக் கிம் மற்றும் ஹுண்டாய் நிறுவன தலைமை நிர்வாகிகள், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.