அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்னசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில், பல்ராம்சிங் என்பவரால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு எண்.W.P.(Civil) 324/2020-இல், 20.10.2023 மற்றும் 11.12.2024 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்ட ஆணைகளின்படி, மனித கழிவுகளை மனிதர்களே கைகளால் அகற்றும் பணியினை மேற்கொள்ளும் நபர்களை (Manual Scavengers) கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் அரியலூர் மாவட்டத்தில்எவரும் கண்டறியப்படவில்லை என தெரியவருகிறது. ஊரக உள்ளாட்சி பகுதிகளில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம்-2013, பிரிவு எண்.11-இன்படி தங்களது ஆட்சேபனைகளை 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) அவர்களுக்கு எழுத்து மூலமாக தெரிவித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் தொழில் புரிவோர்… தகவல் அளிக்க கலெக்டர் அறிவிப்பு….
- by Authour
