மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் நான்கு வழி சாலை விரிவாக்க பணியின் போது கேசவன் என்பவரது வீடு இடிக்கப்பட்டு புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. அவரது பழைய வீட்டின் கழிவறை தொட்டி அகற்றப்படாமலே இருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சென்ற மக்கள் கழிவறை தொட்டியின் மேல் மூடி திறந்து கிடந்ததை பார்த்து உள்ளே பார்த்து உள்ளனர். கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் பாகசாலை காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கழிவுநீர் தொட்டியில் கண்டெடுத்த மனித எலும்புக்கூடை தஞ்சாவூர் தடயவியல் நிபுணர் குழுவிற்கு போலீசார் அனுப்பியுள்ளனர். தஞ்சாவூர் தடயவியல் நிபுணர் குழுவினர் நாளை ஆய்வு மேற்கொண்டு எலும்புக்கூடு ஆணா? பெண்ணா? அவர் எப்படி இறந்தார் என்பதை ஆய்வு செய்து போலீசாருக்கு தெரிவிப்பார்கள். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்.
இந்த நிலையில் கழிவுநீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.