சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு அலுவலகங்களில் மனித உரிமைகள் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகத்திலும் இன்று காலை, மனித உரிமைகள்உறுதிமொழி ஏற்பு நடந்தது. திருச்சி மண்டல பொது மேலாளர்.ஆ. முத்துகிருஷ்ணன் தலைமையில் அனைத்து போக்குவரத்து கழக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் , துணை மேலாளர்கள் ஜூலியஸ் அற்புத ராயன் , சுரேஷ் குமார்( வணிகம் ) சாமிநாதன்( தொழில்நுட்பம்) ரவி (பணியாளர் சட்டம்) மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்கள்ஆகியோர் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .