சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டு தோறும் டிசம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இரண்டாம் உலகமகா யுத்தம் நடைபெற்றபோது நடந்த சொத்து இழப்பு, படுகொலைகள், அட்டுழியங்கள் மற்றும் மனிதப் பேரழிவுகளின் பின்னர் தோன்றிய ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டதே இந்த மனித உரிமைப் பிரகடனம். இந்நிலையில் திருச்சி மாநகராட்சியில் மேயர் மு. அன்பழகன் தலைமையில் மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. மேயர் மு.அன்பழகன் மனித உரிமைகள் நாள் உறுதிமொழியை வாசித்தார். துணை மேயர் ஜி. திவ்யா மற்றும் உதவி ஆணையர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.