பாகிஸ்தான் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் நேற்று மனிதவெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் உடனடியாக 17 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலர் இறந்தனர். இன்று காலை நிலவரப்படி 72 பேர் இறந்து விட்டனர். மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
குண்டுவெடிப்பிற்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.ஒட்டுமொத்த தேசமும் பயங்கரவாதத்துக்கு எதிராக நிற்பதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.